‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
சிம்பு, ஹன்சிகா, சந்தானம் நடித்துள்ள 'வாலு' படம் மே 9ம் தேதி வெளியாவதாக இருந்தது. ஆனால், திட்டமிட்டபடி படம் அந்த தேதியில் வெளியாகாது என ஏற்கெனவே செய்திகள் வெளிவந்தன. இந்த நிலையில் சிம்புவின் அப்பா டி.ராஜேந்தர் 'வாலு' படத்தின் வெளியீட்டு உரிமையை வாங்கிவிட்டார் என அதிகாரப்பூர்வமான தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் படத்தைத் தயாரித்துள்ள சக்கரவர்த்தி பட வினியோகத்தில் விலையை அதிகப்படுத்தி சொல்லி வருவதாகவும், அதனால் எதிர்பார்த்தபடி வினியோகஸ்தர்கள் படத்தை அவ்வளவு விலை கொடுத்து வாங்க வரவில்லை என்றும் சொல்லப்பட்டது.
அதனால், எங்கே படம் மேலும் தாமதமாகும், 'இது நம்ம ஆளு' படத்தையும் உடனே வெளியிட முடியாது என்ற கவலையில் டிஆரே படத்தை வாங்கி விட்டார் என்கிறார்கள். இந்த மாதம் 22ம் தேதியோ அல்லது 29ம் தேதியே படத்தை வெளியிடலாம் என முடிவு செய்துள்ளார்களாம். அதற்குள் வியாபார பேச்சுக்களை முடிப்பதற்கும் ஏதுவாக இருக்கும் என்கிறார்கள். இருந்தாலும் 'வாலு' படம் பற்றிய பேச்சுக்கள் பாசிட்டிவ்வாக இருப்பதாக கோலிவுட்டில் இருக்கிறார்கள்.
சிம்பு, ஹன்சிகா, சந்தானம் இந்தக் கூட்டணியின் நடிப்பும், படத்தில் உள்ள பல காட்சிகளும் மிகவும் ரசனையாக உள்ளதாம். அதனால், இந்தப் படம் கண்டிப்பாக வெற்றி பெறும் என்று கோலிவுட்டில் ஜோசியம் சொல்லி வருகிறார்களாம். இது திட்டமிட்டு பரப்பப்படும் ஒன்றா, அல்லது உண்மையிலேயே படம் நன்றாக இருக்கிறதா என வினியோக வட்டாரங்கள் சந்தேகம் கொண்டுள்ளார்களாம்.