வீர தீர சூரன் - 'டிராப்' ஆன படத்தின் பெயரில் 'விக்ரம் 62' | 'புஷ்பா 2' - ஹிந்தி உரிமை இவ்வளவு விலையா? | ரூ.5 கோடி தாண்டாத தமிழ்ப் படங்கள் : ரூ.50 கோடியைக் கடந்த மலையாளப் படங்கள் | வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி |
பிரபல மூத்த ஹீரோவான ஜெகபதி பாபு சமீபகாலமாக கேரக்டர் ரோல்களில் மட்டுமே கவனம் செலுத்தி வருவதை அனைவரும் அறிவர். அதாவது அவர் தான் நடிக்கும் படங்களுக்காக தேர்ந்தெடுக்கும் ரோல்கள் எல்லாம் பெரிதும் பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது. அவர் தற்போது ஹிதுடு என்ற படத்தில் நடித்து வருகிறார். வெகு விரைவில் வெளியாக இருக்கும் இந்த படத்தின் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. ஹிதுடு படம் பற்றி ஜெகபதி பாபு கூறும்போது, இந்த படத்தில் எனக்கு மிகவும் வித்தியாசமான வேடம். அதாவது இந்த படத்தில் நான் ஒரு ஆசிரியராகவும் அதே வேளையில் ஒரு மாவோயிஸ்ட்டாகவும் நடிக்கிறேன். இப்போதெல்லாம் சமூக அக்கறை உள்ள படங்களில் நடிக்க அதிகம் ஆசைப்படுகின்றேன். இந்த படத்தை அறிமுக இயக்குனரான விப்லவ் ஒரு சிறந்த முயற்சியாக சிறப்பாக இயக்கி உள்ளார். இவ்வாறு ஜெகபதி பாபு கூறியுள்ளார். இந்த படத்தில் பிரபல நடிகையான மீரா நந்தன் நடிக்கிறார். பிரபல தயாரிப்பாளரான சுங்கர மது முரளி தயாரிக்கிறார். இது தவிர ஜெகபதி பாபு ஸ்ரீமந்துடு படத்தில் பிரின்ஸ் மகேஷ் பாபுவுக்கு அப்பாவாக நடிக்கிறார்.