Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கன்னா பின்னா : பாடிபில்டர்களின் நகைச்சுவை கதை!

06 மே, 2015 - 16:02 IST
எழுத்தின் அளவு:
Kanna-Pinna---Full-and-Full-Comedy-movie

சிவசுப்ரமணியன், ஸ்ரீநிவாஸ் தயாரிப்பில் எஸ்.எஸ்.பிக் சினிமாஸ் வழங்கும் படம் "கன்னா பின்னா". தியா என்பவர் இப்படத்தை இயக்கி நடிக்கிறார். ஹீரோயினாக அஞ்சலி ராவ் நடிக்கிறார். இப்படம் பற்றி இயக்குநர் தியா கூறியதாவது, பொதுவாக பாடிபில்டர்களை சினிமாவில் அடியாள் கதாபாத்திரங்களுக்கும், வில்லன் கதாபாத்திரங்களுக்குமே பயன்படுத்தி வருவார்கள். அதிலிருந்து மாறுபட்டு முழுக்க, முழுக்க அனைத்து பாடி பில்டர்கலையும் நகைச்சுவை கதாபாத்திரங்களாக படம் முழுவதும் நடிக்க வைத்திருக்கிறோம்.


பார்ப்பதற்கு பிரமாண்டமான உடலமைப்பில் காட்சியளிக்கும் இந்த உடற்கட்டு வீரர்கள் பெரும்பாலும் குழந்தை தனமாகவும், நகைச்சுவையானவர்களாகவும் தான் இருக்கிறார்கள், அப்படிபட்டவர்களின் வாழ்க்கையைத்தான் படமாக்கி இருக்கிறோம். தமிழகம் முழுவதும் இருந்து நிறைய பாடிபில்டர்கள் இந்த படத்தில் நடித்திருக்கிறார்கள். தமிழகம் , மற்றும் புதுவையில் படப்பிடிப்பை நடத்தி முடித்திருக்கிறோம். படப்பிடிப்பை வேடிக்கை பார்க்க வருபவர்கள் கூட முதலில் "அடேங்கப்பா இவ்வளவு பாதுகாப்பு வீரர்களா? ". என்று வியந்து விட்டு பிறகு நடிப்பதே இவர்கள் தான் என்று தெரிந்து கொண்டு .... முழு ஒத்துழைப்பு கொடுத்தார்கள்.


யூனிட் ஆட்கள் மட்டுமல்ல நடிக்கும் நடிகர்களும் கூட பல காட்சிகளில் நடிப்பை மீறி சிரித்து கொண்டுதான் இருந்தனர் .. அந்த அளவுக்கு படம் முழுவதும் நகைச்சுவை இருக்கிறது . சில இடங்களில் படப்பிடிப்பு நடத்துவதற்கு எங்களுக்கு காவல்துறை ஒத்துழைப்பு கூட தேவைப்படவில்லை , படம் யூனிட் முழுவதும் பாடி பில்டர்களை பார்த்தோ என்னவோ எந்த இடையூரும் எந்த இடத்திலிருந்தும் வரவில்லை என்று சொல்லும் இயக்குனரும் ஒரு பாடி பில்டர்தான் , அதுமட்டுமல்ல படத்தை தயாரிக்கும் தயாரிப்பாளர் நண்பர்கள் இருவரும் கூட பாடி பில்டர்கள்தான் .


முழுக்க நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டிருக்கும் "கன்னா பின்னா " எந்த இடத்திலும் ரசிகர்களை சோர்வு அடைய விடாமல் சிரிக்க வைக்கும் அளவுக்கு படம் இருக்கிறது என்கிறார் இயக்குனர் தியா.


Advertisement
விஷ்ணு-கேத்ரின் தெரஸாவின் வீர தீர சூரன்!விஷ்ணு-கேத்ரின் தெரஸாவின் வீர தீர ... கொம்பனை தொடர்ந்து ஆம்பள விஷாலை இயக்கும் முத்தையா கொம்பனை தொடர்ந்து ஆம்பள விஷாலை ...


வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film thirupathisamy kudumbam
    Tamil New Film oru kanavu pola
    • ஒரு கனவு போல
    • நடிகர் : ராமகிருஷ்ணன் ,
    • நடிகை : அமலா
    • இயக்குனர் :வி.சி விஜய்சங்கர்
    Tamil New Film maayavan
    • மாயவன்
    • நடிகர் : சந்தீப் கிஷன்
    • நடிகை : லாவண்யா திரிபாதி
    • இயக்குனர் :சி.வி. குமார்
    Tamil New Film Kalathur gramam

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2017 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in