டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
பிரபல நடிகை, நடன கலைஞர் மற்றும் தயாரிப்பாளர் போன்ற பன்முகங்களை கொண்ட லக்ஷ்மி மஞ்சு கதாநாயகியாக நடிக்கும் படம் தொங்காடா. இந்த படத்தில் லக்ஷ்மி மஞ்சுவுக்கு ஜோடியாக பிரபல நடிகர் அதிவி செஷ் நடிக்கிறார். இந்த படத்தை அவர் தனது பேனரான மஞ்சு என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பாக தயாரிக்கிறார்.இந்த படம் கடந்த வாரம் ரிலீசாக இருந்த நிலையில், கடைசி நிமிடத்தில் அதில் மாற்றம். என்ன காரணம் என்பது தெரியாமல் இருந்தது. அதாவது கடந்த வாரம் தான் நந்தமூரி பாலகிரிஷ்ணாவின் லயன் படம் ரிலீசாக இருந்தது. அந்த பிரமாண்டமான படத்தோடு சேர்ந்து இந்த படத்தையும் ரிலீஸ் செய்ய இந்த படக்குழுவினர் விரும்பவில்லை. அதனால் தான் தொங்காடா எந்த போட்டியும் இன்றி இந்த வாரம் வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆகும் என்று தெரிகிறது. இந்நிலையில் இந்த படத்தை பற்றி லக்ஷ்மி மஞ்சு கூறியதாவது, எனது தந்தை மோகன் பாபு 50க்கும் ஏற்பட்ட படங்களை தயாரித்தவர். அவரின் அனுபவத்தில் இருந்து கொஞ்சமே கற்று கொண்டு இருந்தாலும், நான் நாயகியாக நடிக்கும் இந்த படத்தையும் தயாரிக்கலாம் என்று நினைத்தேன். காட்சிக்கு தேவையானதை முழுவதுமாக கொடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். இந்த படத்தில் என்னுடைய கதாபாத்திரம் இயல்பாகவும், ரியலாகவும் அமைய வேண்டும் என்று நினைத்தேன். ஓம் சாந்தி ஓம் படத்தை பார்த்து அந்த இன்ஸ்பிரேஷனில் இந்த படத்தை எடுத்து இருக்கின்றோம். இதில் ஒரு பாடலுக்கு ஒன்பது ஹீரோக்களுடன் சேர்ந்து நடித்துள்ளேன் என்றார்.