தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
லிங்குசாமி தயாரிப்பில் கமல் நடித்த உத்தமவில்லன் படம் மே 1 அன்று திரைக்கு வரவில்லை. பைனான்ஸ் பிரச்சனை காரணமாக பல மணி நேரம் பஞ்சாயத்து நடந்து மறுநாள் மே 2 ஆம் தேதி மதியம்தான் படம் ரிலீஸ் ஆனது. ஆனால் ஏற்கனவே திட்டமிட்டபடி மே 1 ஆம் தேதி காலை 9 மணிக்கே பத்திரிகையாளர்களுக்கான காட்சி திரையிடப்பட்டது. படம் திரையிடப்படுவதற்கு முன் அப்படத்தின் பி.ஆர்.ஓ. ஒரு அறிவிப்பு செய்தார். அதாவது தியேட்டர்களில் திரையிடப்படும் படம் இரண்டரை மணி நேரம் மட்டுமே ஓடக்கூடியது என்றும்... உத்தமவில்லன் படத்தை முழுமையாய் பத்திரிகையாளர்கள் ரசிக்க வேண்டும் என்பதற்காக 3 மணி நேரம் ஓடக்கூடிய படத்தை திரையிடுவதாக சொல்லப்பட்டது. 3 மணி நேரம் ஓடிய படம் என்பதாலோ என்னவோ பலரும் நெளிய ஆரம்பித்தனர். இந்நிலையில் தற்போது கிடைத்த தகவலின்படி... அனைத்து தியேட்டர்களுக்கும் கூட 3 மணி நேரம் ஓடக்கூடிய படத்தையே அனுப்பி இருக்கிறார்கள். அதுவே தற்போது உத்தமவில்லன் படத்துக்கு மைனஸாகி, நெகட்டிவ்வான டாக் பரவ காரணமாகிவிட்டது. வாட்ஸ் அப், மற்றும் பேஸ்புக், ட்விட்டரில் 3 மணி நேரம் ஓடுவதை மட்டுமே குறையாக சொல்லி வருகின்றனர் ரசிகர்கள்.