ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
சர்ச்சைப்பேச்சுகளினால் பரபரப்பை உண்டாக்குவதில், பாலிவுட் நடிகர் கமாலும், இயக்குநர் ராம்கோபால் வர்மாவும் கடும் போட்டியில் உள்ளனர். தற்போது கமால் மோதியிருப்பது அனுராக் காஷ்யப் உடன்..... அனுராக் காஷ்யப் இயக்கத்தில், வெளிவர உள்ள பாம்பே வெல்வெட் படம் வெற்றி பெற்றால், தனது உடலுறுப்பை அறுத்துக்கொள்ள முடியுமா என்று கமாலிடம் அனுராக் சவால் விட்டிருந்தார். இந்த சவாலை ஏற்றுக்கொண்ட கமால், படம் தோல்வியடையும் பட்சத்தில், அனுராக் தனது அந்தரங்க உறுப்பை வெட்டிக்கொள்வாரா என்று சவால் விட்டிருந்தார். பாம்பே வெல்வெட் படம், வரும் 15ம் தேதி திரைக்கு வர உள்ளது. இந்நிலையி்ல் மே 15ம் தேதிக்கு பிறகு, அனுராக் காஷ்யப், கரன் ஜோஹரை திருமணம் செய்துகொண்டு, கோவாவில் இனிமையாக பொழுதை கழிக்க உள்ளதாக கமால் கூறியுள்ளது பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.