தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பாஸ்ட் அண்ட் பியூரியஸ் 7 படத்தில் நடிக்க கிடைத்த வாய்ப்பை மறுத்ததற்கு தற்போது வருந்துவதாகவும், ஹாலிவுட் படங்களில் நடிக்க தற்போது தயாராக இருப்பதாக தீபிகா படுகோனே கூறியுள்ளார். இதுகுறித்து, தீபிகா படுகோனே கூறியதாவது, கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக, பாலிவுட்டில் நடித்து வருகிறேன். பாஸ்ட் அண்ட் பியூரியஸ் 7 படத்தில் நடிக்க வாய்ப்பு என்னை தேடிவந்தது. அப்போது நான் மிகவும் பயந்துவிட்டேன். ஹாலிவுட் படங்களில் நடிக்க வேண்டும் என்பது பெரிய சவாலாக இருந்தது. தற்போது தனது எண்ணத்தை மாற்றிக்கொண்டுள்ளேன். எது இருந்தாலும், செய்து பார்க்கவேண்டும் என்பதே அது. ஹாலிவுட் திரையுலகம் என்பது நமக்கு முற்றிலும் மாறுபட்டது ஆகும். ஹாலிவுட் படங்களில் நடிக்க தற்போது தயாராக இருப்பதாக அவர் கூறியுள்ளார். தீபிகா படுகோனே, தற்போது பிகு படத்தின் புரோமோஷவுல் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருவது குறிப்பிடத்தக்கது.