Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

வாய்மை படத்துக்காக கடுமையாக உழைத்திருக்கிறேன்! -சாந்தனு

06 மே, 2015 - 11:07 IST
எழுத்தின் அளவு:
Do-hardwork-for-Vaaimai-Movie-:-Shanthanu

சக்கரகட்டி, சித்து ப்ளஸ்-2, கண்டேன், ஆயிரம் விளக்கு, அம்மாவின் கைப்பேசி ஆகிய படங்களில் நடித்தவர் சாந்தனு. தற்போது வாய்மை என்ற படத்தில் நாயகனாக நடித்துள்ளார். மேலும், கவுண்டமணி, தியாகராஜன், கே.பாக்யராஜ், ராம்கி, ஊர்வசி, பூர்ணிமா, மனோஜ், ப்ருத்வி உள்பட 14 முக்கிய கேரக்டர்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். மின்மேக்ஸ் மூவீஸ் தயாரித்துள்ள இப்படத்தை செந்தில் என்ற புதியவர் இயக்கியுள்ளார். இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அதையடுத்து, மாலை 4 மணி அளவில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.


அப்போது வாய்மை படத்தில் தான் நடித்தது குறித்து சாந்தனு பேசுகையில், இந்த படத்தின் கதையை அதிகாலை 6 மணிக்கு கேட்டேன். டைரக்டர் செந்தில் இரண்டரை மணி நேரம் சொன்னார். கதை எனக்கு ரொம்ப பிடித்து விட்டது அதையடுத்து என் தந்தையும் 4 மணி நேரத்துக்கு மேல் கதை கேட்டார். பின்னர் கதையின் மீதுள்ள நம்பிக்கையில் என்னை நடிக்க சொன்னார். அந்த வகையில், இரண்டு வருடங்களுக்கு மேலாக இந்த வாய்மை படத்தில் நடித்தேன். அதோடு, உதவி இயக்குனராகவும் பணியாற்றினேன். இந்த படம் நன்றாக வரவேண்டும் என்பதற்காக, இயக்குனருடன் சேர்ந்து பல கஷ்டங்களை அனுபவித்திருக்கிறேன். முக்கியமாக, இந்த படத்தில் அதிக டயலாக் பேசாமல், நிறைய பார்பார்மென்ஸை கொடுத்திருக்கிறேன். அதோடு, பல சீனியர் நடிகர் நடிகைகள் இந்த படத்தில் நடித்திருப்பதால் அவர்களிடமிருந்து நிறைய நடிப்பை கற்றுக்கொண்டேன். அது எனக்கு பெரிய பயனாக இருந்தது. மேலும், என் தந்தை கே.பாக்யராஜ் சினிமாவிற்குள் வருவதற்கு முன்பு நிறைய கஷ்டப்பட்டிருக்கிறார். தங்குவதற்கு இடமின்றி, சாப்பிட வழியின்றி இன்னும் எத்தனையோ பெரிய கஷ்டங்களையெல்லாம் தாண்டித்தான் சினிமாவில் என்ட்ரியாகியிருக்கிறார். அதைப்பார்க்கையில் நான் பட்டதெல்லாம் ஒரு கஷ்டம் என்று சொல்ல முடியாது. அதனால், சினிமாவில் இன்னும் வித்தியாசமான கதைகளில் நடித்து நிறைய கஷ்டப்பட்ட நான் தயாராக இருக்கிறேன் என்கிறார் சாந்தனு.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in