ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
தெலுங்கு திரையில் அண்மையில் வெளிவந்த தொசெய் எனும் படத்தின் வெற்றிக்கு பின்னர் நடிகர் நாக சைதன்யா நடிக்கும் புதிய படத்தில் நாயகியாக நடிக்க நடிகை தமன்னா ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளிவந்தது. இதனை நடிகை தமன்னா தற்போது உறுதி செய்துள்ளார்.
S/O சத்யமூர்த்தி படத்தை தயாரித்த தயாரிப்பாளர் ராதா கிருஷ்ணா தயாரிக்கும் இப்படத்தை கார்த்திகேயா புகழ் இயக்குநர் சந்து மொண்டேடி இயக்கவுள்ளார். தமன்னா - நாக சைதன்யா ஜோடி ஏற்கனவே 100% ஆப் லவ் , தடக்ஹா என இரண்டு படங்களில் இணைந்து நடித்துள்ளனர். தற்போது மூன்றாவது முறையாக தமன்னா - நாக சைதன்யா ஜோடி இணையவுள்ளது குறிப்பிடத்தக்கது.
நடிகை தமன்னா தற்போது நடிகர் கார்த்திக்கு ஜோடியாக தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் தயாராகும் படத்தில் நடித்து வருகின்றார். பிவிபி சினிமாஸ் தயாரிக்கும் இப்படத்தில் நடிகர் நாகார்ஜுனா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றார்.