அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
விஜய் சேதுபதி, ஆர்யா, ஷாம் , கார்த்திகா நடிப்பில் SP ஜனநாதன் இயக்கத்தில் யூடிவி மோஷன் பிக்சர்ஸ் மற்றும் பைனரி பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கும் திரைப்படம் 'புறம்போக்கு என்கிற பொதுவுடமை'. பல முன்னணி நடிகர்கள் இணைந்திருக்கும் இப்படம் மே 15ஆம் தேதி வெளியாகவுள்ளது.
படத்தில் தனது கதாப்பாத்திரத்தைப் விஜய் சேதுபதி பற்றி கூறும் பொழுது “இப்படத்தில் நான் 'எமலிங்கம்' என்ற ரயில்வே தொழிலாளியாக வருகிறேன். நகரும் ரயில் வண்டியின் ஓசையும், ரயில்வே தொழிலாளியின் பரபரப்பும் என்னுள் அடங்கவே இல்லை. வேறு எந்த கதாநாயகனும் செய்யாத கதாப்பாத்திரம் என்று நான் தைரியமாக சொல்வேன். எமலிங்கம், ரசிகர்கள் அதிகம் கண்டிடாத ஒரு கதாப்பாத்திரமாக இருக்கும். எனது வாழ்நாளில் நான் நடித்த நல்ல கதாப்பாத்திரங்களில் ஒன்றை இக்கதாபாத்திரம் நிலைக்கும்.
இந்த கதாபாத்திரத்திற்காக பிரத்யேக பயிற்சி என்று ஏதும் எடுக்கவில்லை. உண்மையை சொல்லப்போனால் நடிப்பு என்பது அந்த கதாபாத்திரத்தின் குணாதிசயங்களையும், பின்புலத்தை முழுமையாக உணர்ந்தால் போதுமானது. எமலிங்கம் என்ற கதாபாத்திரத்தின் புதுமைக்காக சற்றே உடல் எடையை கூட்ட வேண்டியிருந்தது. மேலும் இக்கதாபாத்திரத்தை புரிந்துக் கொள்ளும் வகையில் நன்கு விளக்கினார்.”