பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
2012, 2013ம் ஆண்டுகளில் அடுத்தடுத்து பல வித்தியாசமான படங்களைக் கொடுத்து யாரும் எதிர்பாராத விதத்தில் தமிழ்த் திரையுலகத்தில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்தவர் விஜய் சேதுபதி. அந்த வெற்றியைக் கடந்த ஆண்டு தக்க வைத்துக் கொள்ள அவர் தவறிவிட்டார். அந்தத் தவறை இந்த ஆண்டு திருத்திக் கொள்வார் என்று எதிர்பார்த்தால் அடுத்தடுத்து அவர் நடிக்கும் படங்கள் வெளிவரும் ஒரு சூழ்நிலை உருவாகியுள்ளது.
விஜய் சேதுபதி நடித்துள்ள 'புறம்போக்கு என்கிற பொதுவுடமை' இந்த மாதம் 15ம் தேதி வெளியாக உள்ளது. இந்தப் படத்தையடுத்து 'இடம் பொருள் ஏவல்' படம் வெளிவரும். அநேகமாக ஜுன் மாதம் இந்தப் படம் திரைக்கு வரலாம். இதற்கடுத்து எப்போதோ டிரைலர் வெளியிடப்பட்ட 'ஆரஞ்சு மிட்டாய்' படம் வருமா அல்லது எப்போதோ ஆரம்பமான 'மெல்லிசை' படம் வருமா என்பது தெரியவில்லை. இவற்றிற்கிடையே நயன்தாரா ஜோடியாக நடித்துள்ள 'நானும் ரௌடிதான்' படமும் முடிந்து தயாராகி விடலாம். இவற்றில் 'ஆரஞ்சு மிட்டாய், மெல்லிசை' படங்களின் படப்பிடிப்பு முடிந்ததா இல்லையா என்பது குறித்து இதுவரை எந்தத் தகவலும் வெளியாகவில்லை.
இந்தப் படங்களையடுத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்த்தில் 'இறைவி' நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவாகும் படம் என இதற்கு முன்பு தனக்காக ஹிட் படங்களைக் கொடுத்தவர்களின் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இப்போதைக்கு 'புறம்போக்கு' படத்தின் வெளியீடு மட்டுமே உறுதி செய்யப்பட்டுள்ளது. மற்ற படங்களின் வெளியீட்டுத் தேதி எப்போது இருக்கும் என்பது விஜய் சேதுபதிக்கே தெரியுமா என்பது சந்தேகம்தான்.