'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
சூதுகவ்வும்', 'பீட்சா-2 வில்லா' ஆகிய படங்களில் நடித்தவர் கன்னட நடிகை சஞ்சிதா ஷெட்டி. பீட்சா-2 படத்தைவிட சூதுகவ்வும் படத்தில் சஞ்சிதாவின் கேரக்டர் ரசிக்கும்படி அமைந்தது. அப்படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை பெற்ற சஞ்சிதா ஷெட்டிக்கு தொடர்ந்த பட வாய்ப்பு இல்லை. பெங்களுரை சேர்ந்த சஞ்சிதா ஷெட்டி தமிழ்ப்பட வாய்ப்புகளுக்காக காத்திருந்து ஏமாற்றமடைந்தார். எனவே திரும்பவும் பெங்களுருவுக்கு சென்றுவிட்டார்.
இந்நிலையில் அவருக்கு தற்போது 'என்னோடு விளையாடு' என்ற படத்தில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அறிமுக இயக்குனர் அருண்குமார் சாமி இப்படத்தை இயக்குகிறார். இப்படத்தில் பரத் ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாகவே நடிக்கிறார் சஞ்சிதா ஷெட்டி! இப்படத்தின் படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன் துவங்கி தொடர்ந்து நடந்து வருகிறது. இப்படம் தவிர 'பேட்மேஷ்' என்ற கன்னட படத்திலும் நடித்து வருகிறார் சஞ்சிதா ஷெட்டி. இப்படத்தில் தனஞ்சய் கதாநாயகனாக நடிக்கிறார். கன்னட சினிமாவில் அறிமுகமான சஞ்சிதா ஷெட்டி ஐந்து வருடங்களுக்கு பிறகு நடிக்கும் கன்னட படமாம் இது!