தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கடந்த வருடம் பிஜூமேனன் ஹீரோவாக நடித்த 'வெள்ளிமூங்கா' (வெள்ளி ஆந்தை) படம் சூப்பர்ஹிட்டானாலும் ஆனது, அதையடுத்து அவர் சோலோ ஹீரோவாக நடிக்கும் புதிய படத்திற்கு 11 பேர் கொண்ட குழு ஒன்று முட்டி மோதி மண்டையை உடைத்து ஒரு வழியாக டைட்டிலையும் கண்டுபிடித்துவிட்டார்கள். படத்தின் பெயர் 'வெள்ளக்கடுவா'.. அதாவது தமிழில் 'வெள்ளை புலி' என்று அர்த்தம்.
படத்தின் கதையை பாபு ஜனார்த்தனன் எழுதுகிறார். நான்கு படங்களை இயக்கியுள்ள கதாசிரியரான பாபு ஜனார்த்தனன் 'அச்சனுறங்காதவீடு', 'சிட்டி ஆப் காட்', 'காட் பார் சேல்' என உண்மைக்கு நெருக்கமான கதைகளை எழுதக்கூடியவர். ஆனால் இந்தப்படத்தை இயக்குபவர் ஜோஸ் தாமஸ்.. திலீப்பை படம் முழுக்க பெண்ணாக நடிக்கவைத்து 'மாயமோகினி' என்ற படத்தை இயக்கினாரே அவர்தான் இவர். வரும் ஜூலை மாதத்தில் துவங்கவிருக்கும் இதன் படப்ப்பிடிப்பு திருச்சூர் மற்றும் இரிஞ்சாலக்குடா ஆகிய பகுதில் நடைபெற உள்ளது.