ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கோடம்பாக்கத்தில் மட்டுமல்ல சினிமாவை பொறுத்தவரை வதந்தி செய்திக்கு புயல் வேகத்தை விட விரைவாக பரவக்கூடிய சக்தி உண்டு. அந்த வகையில் ஒரு சில இயக்குனர்கள் கிளப்பி விட்ட நியூஸ் பரபரப்பை ஏற்படுத்திவிட்டது. மனம் கொத்தி பறவை படத்தில் நாயகியாக நடித்தவர் ஆத்மியா. இவர் தொடர்ந்து போங்கடி நீங்களும் உங்க காதலும் படத்தில் நடித்தார். படம் வெளியானது. பெரிதாக ஓடவில்லை. அதை தொடர்ந்து வெப்பசலனம் என்ற படத்தில் ராஜா இயக்கத்தில் நடித்தார். படம் இன்னும் திரைக்கு வரவில்லை. நல்ல கதைகள் அமையாததால் சொந்த ஊரான கேரளாவிற்கு சென்று விட்டார். அங்கே ஒரு மலையாள படம் ஆர்ட் மூவி நடித்து முடித்துள்ளார். படம் திரைக்கு வர உள்ளது. இந்நிலையில் ஆத்மியா இறந்து விட்டார் என்று ஒருசில இயக்குனர்கள் வதந்தியை பரப்பி விட்டனர். இதுபற்றி அறிய ஆத்மியாவிடம் தொடர்பு கொண்டபோது போனை எடுத்து இந்த செய்தியை கேட்டதும் விழுந்து விழுந்து ஆவி கணக்கா சிரித்தார். யார் கிளப்பி விட்டது. இந்த ஆண்டுக்கான பெரிய ஜோக் என்கிறார். கூடிய விரைவில் தமிழ் படத்தில் நடிக்க உள்ளாராம்.