Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஜெயா டி.வி.,க்கு கைமாறியதா காவலன்?

29 டிச, 2010 - 10:05 IST
எழுத்தின் அளவு:

நடிகர் விஜய் நடித்த காவலன் படம் ஜெயா டி.வி.,க்கு கைமாறி விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் அதன் தயாரிப்பாளர் சக்தி சிதம்பரம் அதனை மறுத்துள்ளார். காவலன் படத்துக்கு தியேட்டர் கிடைக்காத பிரச்னை ஒரு புறமென்றால், அந்த படத்தில் அசின் நடித்திருப்பது இன்னொரு பிரச்னை... விஜய்க்கு அடுத்தடுத்த தோல்வியும் இந்த பிரச்னைகளுடன் கைகோர்த்துக் கொண்டு தியேட்டர் அதிபர்கள் ரூபத்தில் காவலனுக்கு எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டிருக்கிறது. இதனால் விஜய்யின் தந்தை டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகரன் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து உதவி கோரியது எல்லோருக்கும் தெரிந்த சங்கதிதான்.

அந்த சந்திப்பின்போது இன்னொரு உதவியும் காவலனுக்கு கிடைத்ததாக செய்திகள் வெளியாயின. அதாகப்பட்டது, புதிய படங்கள் ரீலிஸ் ஆனாலே முன்னணி சேனல்கள் இரண்டு பேர் போட்டி போட்டுக் கொண்டு படங்களை விலை கொடுத்து வாங்கி வருகிறார்கள். யானைகளுக்கு நடுவில் எறும்புக்கு என்ன வேலை என நினைத்த மற்ற சேனல்கள் இந்த போட்டியில் கலந்‌து கொள்ளாமல் ஒதுங்கியே நிற்கின்றன. அப்படியே போட்டிக் களத்தில் குதித்தாலும் தோல்விதான் கிடைத்து வந்தது. இந்நிலையில்தான் காவலன் படத்தின் தொலைக்காட்சி உரிமையை ‌ஜெயா டி.வி., வாங்கி விட்டதாக முதலில் உறுதி படுத்தப்படாத தகவல்கள் வெளியாயின. இந்நிலையில் அந்த தகவலை படத்தில் தயாரிப்பாளர் சக்தி சிதம்பரம் மறுத்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (11) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (11)

காமன் man - tamil nadu,இந்தியா
30 டிச, 2010 - 01:53 Report Abuse
 காமன் man இவன்ன்லான் ஒரு ஆளு .... இவனபத்தி நியூஸ் வேற... நாராயணா... இந்த கொசு (விஜய்) தொல்லை தாங்கமுடியளையப்பா...
Rate this:
ராம் - Chennai,இந்தியா
30 டிச, 2010 - 01:53 Report Abuse
 ராம் மாப்பு... உனக்கு நீயே வச்சிகிட்டியே ஆப்பு... நல்ல காலத்துலேயே "உன் பேச்சை நீயே கேக்கமாட்ட" நாங்க சொல்லியா திருந்த போற.
Rate this:
பூபதி - singapore,இந்தியா
29 டிச, 2010 - 18:54 Report Abuse
 பூபதி ஏம்பா விஜய்... பேசாம தி.மு.க.-காரங்க சொல்றத கேட்டுட்டு அவங்களுக்கு ஜால்ரா போடப்பாரு. அப்பத்தான் பொழப்பு நடக்கும். என்னபண்றது 36% தமிழக சொத்து அவங்க குடும்பத்துலதான் இருக்குன்னு பேசிக்கிறாங்க. எதுக்கும் யோசி...
Rate this:
சசி குமார் - Chennai,இந்தியா
29 டிச, 2010 - 18:27 Report Abuse
 சசி குமார் Body Guard எவ்வளவு அருமையான படம். அந்த படத்தை விஜய் நடிச்சு பார்க்கற கொடுமைக்கு தமிழ் ரசிகர்கள் ஆளாக கூடாது. இந்த படம் ஒடுச்சினா அது ஒரு அருமையான கதை, இயக்கம் மற்றும் நடிப்பிற்கு அவமானம். நல்ல சினிமாவிற்கே நம்முடைய ஆதரவை தர வேண்டும்.
Rate this:
செந்தில் - madhurai,இந்தியா
29 டிச, 2010 - 15:39 Report Abuse
 செந்தில் ஜெய டிவி ஏற்கனவே ரொம்ப Famous. இந்த லட்சணத்தில விஜய் படம் வேற வாங்கிட்டாங்களா. இனிமே என்ன ஜெயா டிவி -ய இழுத்து மூட வேண்டியது தானே.
Rate this:
மேலும் 6 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in