‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
மலையாளப்பட இயக்குநர் பிரியதர்ஷன் இயக்கிய லேசா லேசா படத்தின் மூலம் தமிழ்சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் த்ரிஷா.அதற்கு முன் ஜோதிகா நடித்த ஜோடி படம் உட்பட பல படங்களில் தினம் 200 ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டு ரிச்சி கேர்ள் என்கிற துணை நடிகையாக இருந்தவர்தான் த்ரிஷா.
ப்ரியதர்ஷன் கண்ணில் பட்ட நேரமோ என்னவோ ஒரே படத்தில் புகழ் பெற்றார். அவர் நடிக்க வந்து 15 வருடங்கள் ஆகிவிட்டன. இந்த காலக்கட்டத்தில் கிட்டத்தட்ட 50 படங்களில் நடித்து முடித்துள்ளார் த்ரிஷா. இது ஒருவகையில் சாதனைதான்! தமிழ்சினிமாவைப் பொறுத்தவரையில் கதாநாயகிகளின் வாழ்வு அதிகபட்சம் 5 வருடங்கள்தான்.
குறிப்பிட்ட ஒரு சில நடிகைகளே பல வருட காலம் தொடர்ந்து கதாநாயகியாக நிலைத்து நின்றிருக்கின்றனர்! அந்த பட்டியலில் த்ரிஷாவும் சேர்ந்திருக்கிறார்.
ரசிகர்கள் மத்தியில் த்ரிஷாவுக்கு தனி ஒரு இடம் உண்டு! தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி உட்பட பல மொழிகளில் நடித்துள்ள த்ரிஷா பலபேருடன் கிசுகிசுக்களில் அடிபட்டு, வருண்மணியனுடன் திருமண நிச்சயதார்த்தம் ஆன பிறகும் கூட இன்னமும் தமிழ் சினிமாவில் வான்டட் ஹீரோயினாகவே இருந்து வருகிறார்.
தற்போது ஜெயம்ரவி உடன் 'பூலோகம்', 'அப்பா டக்கர்', செல்வராகவன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படம், திரு இயக்கத்தில் ஜெய் நடிக்கும் படம் என பல படங்களில் நடித்து வருகிறார். இவை தவிர சில தெலுங்கு படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார் த்ரிஷா!