ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
நடிகர் பாலகிருஷ்ணா, நடிகை த்ரிஷா மற்றும் நடிகை ராதிகா ஆப்தே நடித்துள்ள லயன் படத்தின் இறுதிக்கட்டபணிகள் முடிந்துவிட்டதால் படக்குழுவினர் இப்படத்தை தணிக்கைக்கு அனுப்பியுள்ளனர். இதனால் இப்படம் தாமதம் இல்லாமல் அறிவிக்கப்பட்டபடி மே 8 ஆம் தேதி திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இயக்குநர் சத்யதேவ் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் மணிசர்மா இசையமைத்துள்ளார். இப்படத்தில் பாலகிருஷ்ணா சி.பி.ஐ யாக நடித்துள்ளார். தயாரிப்பாளர் ரகுபதி ரமணா ராவ் பெரும் பொருட்செலவில் தயாரித்திருக்கும் இப்படத்தினை தெலுங்கு ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்கின்றனர்.