பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
டொங்கா பிரேமா எனும் தெலுங்கு படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான நடிகை குஷி முகர்ஜி வட இந்தியாவைச் சேர்ந்தவர். தெலுங்கு படத்தைத் தொடர்ந்து தற்போது இந்தியில் தனது முதல் படத்தில் நடித்து வரும் நடிகை குஷி முகர்ஜி மைனரான ஹோட்டல் ஊழியர் மீது, தான் உறங்கும் போது தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார். போபாலில் இந்தி பட படப்பிடிப்பில் ஈடுபட்டு வரும் நடிகை குஷி முகர்ஜி அங்கு ஒரு ஹோட்டலில் தங்கியுள்ளார். அவர் உறங்கிக் கொண்டிருக்கும்போது உள்ள வந்த அந்த ஹோட்டல் ஊழியர் குஷியிடம் தவறாக நடக்க முயன்றதாக குஷி போலீசில் தெரிவித்துள்ளார். ஆனால் மைனரான அந்த ஹோட்டல் ஊழியர் நடிகை குஷி குடிபோதையில் இருந்ததாகவும், அவரை எழுப்பவே தான் அவர் அருகில் சென்றதாகவும் தெரிவித்துள்ளார். போலிசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இத்தகவல் டோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.