பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
தமிழ், தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான த்ரிஷா இன்று அவரது 33வது பிறந்த நாளைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார். த்ரிஷாவுக்கு பிரபல தொழிலதிபரும், தயாரிப்பாளருமான வருண் மணியனுடன் சில மாதங்களுக்கு முன் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. ஆனால், கடந்த பத்து நாட்களாக இருவரும் பிரிந்து விட்டதாகவும், இருவருக்கும் திட்டமிட்டபடி திருமணம் நடக்குமா என்பது சந்தேகம்தான் என்றும் தகவல்கள் வெளியாகின.
த்ரிஷாவின் பிறந்த நாளை முன்னிட்டு, அவருடன் முன்னர் கிசுகிசுக்கப்பட்ட தெலுங்கு நடிகர் ராணா டகுபதி உட்பட நடிகர் விஷால், மாதவன், ஜெயம் ரவி, நடிகைகள் டாப்ஸீ, ஹன்சிகா, நிகிஷா பட்டேல், கார்த்திகா, வரலட்சுமி, இயக்குனர் செல்வராகவன் உட்பட பலர் டிவிட்டர் மூலம் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்கள். ராணா டகுபதியின் வாழ்த்துக்கு 'தாங்க் யூ சைக்கோ' என த்ரிஷா நன்றி தெரிவித்துள்ளார். அந்த 'சைக்கோ' என்ற வார்த்தையை நடிகர் விஷால் , தன்னுடைய வாழ்த்தில் மறக்காமல் குறிப்பிட்டுள்ளார்.