‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
ரஜினிகாந்த் பற்றிய பரபரப்புச் செய்தியை தற்போது யார் வேண்டுமானாலும் கிளப்பி விடும் நிலை வந்துவிட்டது. அவர் இந்தப் படத்தில் நடிக்கிறார், அந்தப் படத்தில் நடிக்கிறார், இவர் இயக்கத்தில் நடிக்கிறார், அவர் இயக்கத்தில் நடிக்கிறார் என சம்பந்தப்பட்டவர்களைத் தவிர மற்றவர்கள் செய்திகளாகவும், தகவலாகவும் வெளியிட்டுக் கொண்டேயிருக்கிறார்கள். அந்த வரிசையில் நேற்று தமிழ்த் திரையுலகத்தின் மக்கள் தொடர்பாளர் ஒருவர் ''ரஜினிகாந்த் , “அட்டகத்தி, மெட்ராஸ்' படங்களை இயக்கிய ரஞ்சித் இயக்கத்தில் அடுத்து நடிக்கப் போகிறார். படத்தைத முன்னணி தயாரிப்பாளர் ஒருவர் தயாரிக்கிறார்,” என ஒரு ட்வீட் செய்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
ஆனால், இந்தத் தகவலை ரஜினிகாந்தின் மக்கள் தொடர்பாளர் மறுத்துள்ளார். ரஜினிகாந்த் அவருடைய அடுத்த படம் பற்றி பலருடன் பேசிக் கொண்டிருக்கிறார். ஆனால், இதுவரை எதுவுமே உறுதி செய்யப்படவில்லை என்று சொல்கிறார்.
ரஞ்சித், ஏற்கெனவே சூர்யா நடிக்கும் படம் ஒன்றை இயக்குவதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் அவர் திடீரென ரஜினிகாந்த் படத்தை இயக்குவாரா என்பதும் சந்தேகம்தான். அப்படியே இருந்தாலும், ரஜினிகாந்த் படம் பற்றிய தகவல் அவரிடமிருந்தோ அல்லது படத்தைத் தயாரிக்கும் தயாரிப்பாளரிடமிருந்தோ வந்தால் மட்டுமேதான் உறுதியாகச் சொல்ல முடியும். அதுவரை, இது போன்று எதையாவது, யாராவது பரப்பிக் கொண்டேதான் இருப்பார்கள் என மூத்த தயாரிப்பாளர் ஒருவர் தெரிவிக்கிறார்.