'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
வெங்கட் பிரபு - சூர்யா முதன் முறையாக இணைந்துள்ள 'மாஸ்' படத்தின் இசை வெளியீடு மே 8ம் தேதி நடக்க உள்ளது. வெங்கட் பிரபு - யுவன்ஷங்கர் ராஜா கூட்டணி இணையும் 6வது படம் இது. இதற்கு முன் இவர்கள் இணைந்த ''சென்னை 28, சரோஜா, கோவா, மங்காத்தா, பிரியாணி” ஆகிய படங்களின் பாடல்களில் 'பிரியாணி' மட்டுமே கொஞ்சம் பின் தங்கிவிட்டது.
'மாஸ்' படத்தின் பாடல்கள் நன்றாக வந்துள்ளதாக படக்குழுவினர் ஏற்கனெவே தெரிவித்து வருகிறார்கள். இந்தப் படத்திற்கு தமன் ஒரு பாடலுக்கு ஆர்க்கெஸ்ட்ரேஷன் செய்திருக்கிறார். இது தொடர்பாக யுவனுக்கும், சூர்யாவுக்கும் இடையில் மனஸ்தாபம் ஏற்பட்டதாகக் கூட செய்திகள் வெளிவந்தன. ஆனால், தற்போது படத்தின் பாடல்களையும், பின்னணி இசை உருவாக்கத்தையும் பார்த்த பிறகு சூர்யா, யுவன்ஷங்கர் ராஜாவை மனம் திறந்து பாராட்டினார் என்கிறார்கள்.
வெங்கட் பிரபு இதுவரை இயக்கிய படங்களில் யுவன் இல்லாமல் இயக்கியதே இல்லை. தன் தம்பியான யுவனை அவர் என்றுமே விட்டுக் கொடுத்ததில்லை. 'மாஸ்' படத்தின் இசை வெளியீட்டை பிரம்மாண்டமாக நடத்தப் போகிறார்களா அல்லது நேரடியாக படத்தின் சிடிக்கள் கடைகளுக்கு அனுப்பப்பட்டுவிடுமா என்பது குறித்த தகவலை தயாரிப்பு நிறுவனத்தினர் இன்னும் வெளியிடவில்லை.