இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்த ஐ படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்தார். அந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டானது. அதில் "ஐல ஐ ஐல ஐ..." என்ற பாடலை பாடியவர் பிரபல கனடா பாடகி நடாலி. இவர் ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கும் ஹாலிவுட் படங்களின் பாடகி, ரகுமானில் உலக இசை பயணத்தில் அவருடன் சென்றவர். ஐ படத்தின் மூலம் தமிழ் பட பாடகியாக அறிமுகமானார். தொடர்ந்து தமிழ் படங்களில் பாட ஆசை கொண்டுள்ளார்.
இது பற்றி அவர் கூறியிருப்பதாவது: எனக்கு ஆங்கிலம் தவிர வேறு மொழிகள் தெரியாது. அதனால் நான் வேறு மொழிகளில் பாட ஆர்வம் இல்லாமல் ஆங்கில ஆல்பங்கள், ஹாலிவுட் படங்களில் பாடிக்கொண்டிருந்தேன். என் குரல் பிடித்து இந்தி படங்களுக்கு பலர் அழைத்தபோது தெரியாத மொழியில் பாட விருப்பமில்லாமல் மறுத்தேன். அதன் பிறகு இந்தியா பற்றியும், அதன் இசை பாரம்பரியம் பற்றியும் படித்து தெரிந்து கொண்ட பிறகு இந்தியில் பாட ஆர்வம் வந்தது. இசை அமைப்பாளர் சோனு நிகாமின் ஆல்பத்தில் முதலில் பாடினேன். அதைக்கேட்டு பல இந்திப் படங்களில் வாய்ப்பு கிடைத்தது.