‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
ஓவியா, ஸ்ரீதிவ்யா, ப்ரியாஆனந்த் என பெரிய அளவில் பிரபலமில்லாத ஹீரோயினிகளை தனக்கு ஜோடியாக்கி வந்த சிவகார்த்திகேயன், தன்னையும் முன்னணி ஹீரோவாக உயர்த்திக்கொள்ள வேண்டும் என்பதற்காக மான்கராத்தே படத்தில் ஹன்சிகாவுடன் ஜோடி சேர்ந்தார். ஆனால், அந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் நடிக்க அழைத்தபோது முதலில் தயங்கினார் ஹன்சிகா. அதையடுத்து, அவருக்கு வழக்கத்தைவிட கூடுதலான சம்பளத்தைக் கொடுத்து நடிக்க வைத்தனர். பின்னர், தனது புதிய படத்தில் நயன்தாராவுடன் இணைய ஆசைப்பட்டார் சிவகார்த்திகேயன். ஆனால், அவர் இவரைவிட அதிக மெச்சூரிட்டியாக இருப்பார் என்று சிலர் சொன்னபோது அதை ஏற்றுக்கொண்டு மீண்டும் ஸ்ரீதிவ்யாவுடன் இணைந்தார். இந்நிலையில், தற்போது புதிய பட நிறுவனம் தொடங்கியிருக்கும் சிவகார்த்திகேயன், அதில் தான் நடிக்கும் படத்தில் கண்டிப்பாக சமந்தா நடிக்க வேண்டும் என்று அவருக்கு அழைப்பு விடுத்தார். அதற்கு சமந்தா உடனே ஓகே சொல்லிவிட்டாராம். ஆக, சூர்யா, விஜய், விக்ரமுடன் நடித்து விட்டு, தற்போது மீண்டும் சூர்யா மற்றும் தனுசுடன் நடிக்கும் சமந்தா, அதற்கடுத்து சிவகார்த்திகேயனுடன் இணைகிறார்.