ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் புலி படத்தின் வசன காட்சிகள் முடிவடைந்து விட்டது. அதனால் தற்போது பாடல் காட்சிகளை படமாக்கும் இறுதிகட்ட பணிகள் தொடங்கப்பட்டிருக்கிறது. மேலும், இதில் நாயகிகளாக நடிக்கும் ஸ்ருதிஹாசன், ஹன்சிகா இரண்டு பேருடனும் விஜய்க்கு டூயட் பாடல் உள்ளதாம். அந்த பாடல்களை சீனாவில் படமாக்க ஏற்கனவே திட்டமிட்டிருந்தார் சிம்புதேவன்.
ஆனால், தற்போது லொகேசனை கம்போடியா நாட்டுக்கு மாற்றியிருக்கிறார். காரணம் புலி சரித்திர பின்னணி கொண்ட கதையில் உருவாவதால், பல காட்சிகளை கோயில் லொகேசன்களில் படமாக்கி வந்த அவர், பாடல் காட்சிகளையும் உலக பிரசித்தி பெற்ற கோயில்களில் படமாக்குகிறாராம்.