ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
சிம்பு வாலு பையனாக நடித்துள்ள படம் வாலு. ஹன்சிகா அவருக்கு ஜோடி சேர்ந்துள்ள இந்த படத்தை விஜயசந்தர் இயக்கியிருக்கிறார். மேலும், சந்தானம், விடிவி கணேசன், மந்த்ரா, ஆடுகளம் நரேன் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தில் நடித்துக்கொண்டிருக்கும்போதே, இது நம்ம ஆளு படத்திலும் நடித்தார் சிம்பு. அதோடு பைனான்ஸ் பிரச்சினை காரணமாக அடிக்கடி படம் நிறுத்தப்பட்டு அவ்வப்போது படமாக்கப்பட்டு வந்தது. அதோடு ஆரம்பத்தில் வாலு டைட்டிலுக்கு பிரச்சினையும் ஏற்பட்டு பின்னர் அடங்கியது. இந்நிலையில், பலமுறை இப்படம் ரிலீசுக்கு தயாராகி விட்டதாக சொன்னார்கள். ஆனால், கடைசி நேரத்தில் தேதி மாற்றப்பட்டது. இதனால் இணையதளங்களில் சிம்புவை கிண்டல் செய்தும் வந்தனர். தற்போது இது நம்ம ஆளு படமும் முடிவடையாத நிலையில், கெளதம்மேனன் இயக்கும் அச்சம் என்பது மடமையடா படத்திலும், செல்வராகவனின் புதிய படத்திலும் நடிக்கிறார் சிம்பு. இந்த நிலையில், வருகிற 9-ந்தேதி அப்படம் திரைக்கு வருவது உறுதியாகி விட்டதாக விளம்பரம் செய்து வருகிறார்கள். அதோடு, சிம்புவின் தந்தையான டி.ராஜேந்தரும், வாலு மே 9-ந்தேதி கண்டிப்பாக திரைக்கு வருகிறது என்று கூறி வருகிறார்.