பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
அஜித் அடுத்து 'வீரம்' சிவா இயக்கத்தில் நடிக்க உள்ள படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இன்றைய இளம் முன்னணி இசையமைப்பாளர்களில் முன்னணியில் இருப்பவராக இருக்கும் அனிருத் குறுகிய காலத்திலேயே விஜய், அஜித் ஆகியோர் நடிக்கும் படங்களுக்கு இசையைமக்கும் அளவிற்கு முன்னேறி விட்டார். 'கத்தி' படத்தின் பாடல்களும், படமும் ஹிட்டானதைத் தொடர்ந்து பட்டி தொட்டி எங்கும் அனிருத் தெரிய ஆரம்பித்து விட்டார்.
தற்போது அஜித் படத்திற்கு இசையமைக்கவும் ஆரம்பித்து விட்டார். நேற்று அஜித்தின் பிறந்த நாளை முன்னிட்டு, அவருக்கு வாழ்த்து சொன்ன அனிருத், தல 56 படத்தின் அப்டேட் விஷயமாக ஒன்றைக் குறிப்பிட்டுள்ளார். “தீம் மியூசிக்கும், அஜித்தின் அறிமுகப் பாடலும் ரெடி” என அவருடைய டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.
அஜித்துக்கென தீம் மியூசிக்கை அற்புதமாக அமைத்து அவருடைய ஹீரோயிசத்தை மேலும் உயர்த்தியவர் யுவன்ஷங்கர் ராஜா. 'பில்லா, மங்காத்தா' ஆகிய படங்களில் அவர் இசையமைத்த தீம் மியூசிக் அந்த அளவிற்கு ஹிட்டானது.
இப்போது யுவன்ஷங்கர் ராஜாவைப் பின்பற்றி அனிருத்தும் தீம் மியூசிக் அமைத்துள்ளார்.