‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
'கொக்கி குமாரு', புதுப்பேட்டை படத்தில் தனுஷ் நடித்த கதாபாத்திரத்தின் பெயர். அண்டர் கிரவுண்டு அடியாட்களைப் பற்றிய அந்தப் படத்தை தனுஷின் அண்ணன் செல்வராகவன் இயக்கியிருந்தார். வெளியான போது வியாபார ரீதியாக பெரிதாக வெற்றி பெறவில்லை என்றாலும் செல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்த படங்களில் குறிப்பிடும்படியான படமாக அமைந்தது.
அந்த 'கொக்கி குமாரு' கதாபாத்திரத்தை அப்படியே 'வை ராஜா வை' படத்திலும் படத்தின் இயக்குனர் ஐஸ்வர்யா தனுஷ் பயன்படுத்தியிருக்கிறார். மனைவிக்காக கேமியோ கதாபாத்திரத்தில் தனுஷும் நடித்துக் கொடுத்திருக்கிறார். 'வை ராஜா வை' படத்தில் 'கொக்கி குமாரு' கதாபாத்திரத்தில் நடித்ததைப் பார்த்த பிறகு தனுஷுக்கு 'புதுப்பேட்டை' படத்தைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் வந்திருக்கிறது.
அதனால், அவருடைய ஹோம் தியேட்டரில் தனியாக 'புதுப்பேட்டை' படத்தைப் பார்த்து ரசித்திருக்கிறார். அதோடு தன் அண்ணனை மிகவும் நேசிப்பதாகவும் டிவீட்டி இருக்கிறார். 'புதுப்பேட்டை' படத்தில் வயதுக்கு மீறிய ஒரு கதாபாத்திரத்தில் தனுஷ் நடித்திருந்தாலும் அவருடைய நடிப்பு இன்றும் பேசப்படும் ஒன்றாகவே உள்ளது.