தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
மணிவண்ணன் இயக்கிய அமைதிப்படை பார்ட் 2 படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானவர் சுரேஷ் காமாட்சி. தனது வி ஹவுஸ் புரொடக்ஷன் மூலம் அமைதிப்படை 2, கங்காரு படங்களை தயாரித்தார். கங்காரு படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்கவும் செய்தார்.
தற்போது சுரேஷ் காமாட்சி இயக்குனராகியிருக்கிறார். அவர் இயக்கும் படத்திற்கு அத்தனைக்கு ஆசைப்படு என்று டைட்டில் வைத்திருக்கிறார். முன்னணி ஹீரோ நடிக்கிறார். ஹீரோயினியாக கங்காரு படத்தில் நடித்த ஸ்ரீப்ரியங்காவே நடிக்கிறார். சுரேஷ் காமாட்சி ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். ராஜரத்னம் ஒளிப்பதிவு செய்கிறார், ஸ்ரீனிவாஸ் இசை அமைக்கிறார்.
"இயக்குனராகும் ஆசையில்தான் சினிமாவுக்கு வந்தேன். சந்தர்ப்ப சூழ்நிலையால் தயாரிப்பாளர் ஆனேன். இப்போது எனது இயக்குனர் ஆசை நிறைவேறுகிறது. பாலச்சந்திரன் படைப்பகம் என்ற நிறுவனம் தயாரிக்கிறது. ஈரோடு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் படப்பிடிப்பு நடக்கிறது. அடுத்த வாரம் படப்பிடிப்பு தொடங்குகிறது" என்கிறார் சுரேஷ் காமாட்சி.