தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கமல்ஹாசன், லிங்குசாமியுடன் இணைந்து தயாரித்துள்ள படம் உத்தம வில்லன். அவரே கதை, திரைக்கதை எழுதி, நடித்து, அவரது நண்பரும், நடிகருமான ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள, ''உத்தம வில்லன்'' படத்தில், கமல் உடன் ஆண்ட்ரியா, பூஜா குமார், ஊர்வசி, ஜெயராம், நாசர், மறைந்த இயக்குநர் கே.பாலசந்தர், இயக்குநர் விஸ்வநாத் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் உலகம் முழுக்க 1500 தியேட்டர்களிலும், தமிழகத்தில் சுமார் 400 தியேடர்களிலும் வௌியாகிறது.
மே 1ம் தேதியான இன்று இப்படம் ரிலீஸ் செய்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தமிழகத்தில் இப்படம் வௌியாகவில்லை. முதலில் காலை 8 மணிக்கு ரசிகர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த காட்சிகள் ரத்து செய்யப்பட்டன.
இதுப்பற்றி விசாரித்த போது, தயாரிப்பாளர் லிங்குசாமி தரப்பினருக்கும், விநியோகஸ்தர்களுக்கும் பைனான்ஸ் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதனால் படம் கடைசி நேரத்தில் வௌியாகவில்லை என்று தெரியவந்தது.
தொடர்ந்து தயாரிப்பு தரப்புக்கும், விநியோகஸ்தர் தரப்புக்கும் சென்னையில் பேச்சுவார்த்தை நடந்தது. அதன்படி இருவருக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையின் முடிவில் சுமூகமான முடிவு ஏற்பட்டுள்ளது. இதனால் படம் இன்று மாலை 6 மணிக்கு மேல் வௌியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.