தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
விமல் நடித்து வந்த நீயெல்லாம் நல்லா வருவடா என்ற படம்தான் தற்போது காவல் என்று பெயர் மாறியிருக்கிறது. சமுத்திரகனி முக்கிய போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள இந்த படத்தை ரொம்பவே எதிர்பார்க்கிறார் விமல். அதோடு, இப்படத்தில் போலீஸ் வேடத்தில் நடித்திருக்கும் சமுத்திரகனியின் நடிப்பும், அந்த படத்திற்காக அவர் எடுத்துக்கொண்ட ரிஸ்க்கையும் ரொம்பவே பெருமையாக பேசி வருகிறார்.
அவரிடத்தில், நீங்கள் எப்போது காக்கி சட்டை அணிந்து நடிப்பீர்கள்? என்று கேட்டால், காக்கி சட்டை போட்டு நடிக்கனும்னா ஒரு உடல்கட்டு வேண்டும். அது எனக்கு இல்லை. அதனால் எனக்கு பொருந்தாத வேடத்தில் நடிக்க ஒருபோதும் நான் ஆசைப்படுவதுமில்லை என்கிறார்.
மேலும், களவாணி, வாகை சூடவா போன்ற கதைகள்தான் எனக்கு செட்டாகும். குறிப்பாக, காதல், காமெடி, ரொமான்ஸ் இப்படித்தான் என் ரூட் போய்க்கொண்டிருக்கிறது. அதுதான் எனக்கு பொருத்தமாகவும் இருக்கிறது. அதனால் நான் இதேபோன்று ஜாலியான கமர்சியல் ரூட்டில் தொடர்ந்து பயணிக்கவே விரும்புகிறேன் என்கிறார் விமல்.