ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
யுவன் ஷங்கர் ராஜாவின் கடைசி சூப்பர் ஹிட் என்றால் அது அஞ்சான் பாடல்கள்தான். அதையடுத்து, அவரது இசையில் பூஜை வெளியாகி ஓரளவு ஹிட்டானது. வை ராஜா வை தற்போது வெளியாகியிருக்கிறது. இப்படத்தின் பாடல்களும் ஓரளவு பேசப்பட்டு வருகிறது. ஆனால், அடுத்தபடியாக மறுபடியும் அதிரடியான டியூன்களை கொடுக்க வேண்டும் என்று தனது கைவசமுள்ள மாஸ், தரமணி, யாட்சன் போன்ற படங்களுக்கு தற்போது அதிரடியான இசையை கொடுத்துக்கொண்டிருக்கிறார் யுவன்.
இதில் மாஸ் படத்தின் பாடல்களை அஞ்சானுக்கு இணையாக பிரமாதமாக தயார் செய்து விட்டாராம். இப்படத்தின் அனைத்து பாடல்களையும் கேட்ட சூர்யா அசந்து விட்டாராம். அதையடுத்து மாஸ் பாடல்கள் அஞ்சானை விடவும் சூப்பர் ஹிட்டாகும் என்று சொல்லி யுவன் ஷங்கர் ராஜாவை பாராட்டினாராம். மாஸ் ஹீரோ சூர்யா பாராட்டியதில் இருந்து உற்சாக மனநிலையுடன் அப்படத்தின் பின்னணி வேலைகளில் ஈடுபட்டிருக்கிறாராம் யுவன்.