Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

உத்தமவில்லன் ரசிகர்களுக்கான காலை காட்சி திடீர் ரத்து - ரசிகர்கள் ஏமாற்றம்

01 மே, 2015 - 10:36 IST
எழுத்தின் அளவு:
Uthamavillain-morning-show-cancelled

கமல்ஹாசனின் கதை, திரைக்கதையில், அவரது நண்பரும், நடிகருமான ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில், கமலின் வித்தியாசமான நடிப்பில், பிரமாண்டமாய் உருவாகி, இன்று மே 1ம் தேதி உலகம் முழுக்க ரிலீஸாகியுள்ள படம் உத்தம வில்லன். பல்வேறு தடைகளை கடந்து இப்படம் இன்று ரிலீஸாகியுள்ளது. ஆனால் தமிழகத்தில் மட்டும் இப்படம் வௌிவரவில்லை.


விநியோகஸ்தர்களுக்குள் ஏற்பட்ட பிரச்னையால் உத்தம வில்லன் படம் தமிழகம் முழுக்க இன்று காலை காட்சி ரிலீஸாகவில்லை. கமலின் அபிமான ரசிகர்களுக்காக காலை 8 மணிக்கு சிறப்பு காட்சி தமிழகம் முழுக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள தியேட்டர்களில் ரசிகர்கள் அதிகாலை முதலே காத்திருந்தனர். ஆனால் அந்தகாட்சி திடீரென ரத்து செய்யப்பட்டது ரசிகர்களை பெரும் ஏமாற்றத்திற்கு ஆளாக்கியுள்ளது.


இதுதொடர்பாக சென்னையில் ஒரு தியேட்டரில் படம் பார்க்க வந்து ஏமாற்றத்துடன் சென்ற ரசிகர் ஒருவர் கூறியதாவது, என்ன காரணம் என்று தெரியவில்லை, திடீரென காலை காட்சி ரத்து செய்யப்பட்டதாக தியேட்டர் ஊழியர்கள் தெரிவித்தனர். எதற்காக என்று கேட்டபோது அவர்கள் சரியான பதிலை அளிக்கவில்லை. தொடர்ந்து 11 மணி காட்சியாவது நடக்குமா என்று கேட்டதற்கு அதுவும் உறுதியில்லை என தியேட்டர் ஊழியர்கள் பதில் அளித்ததாக அந்த ரசிகர் தெரிவித்தார்.


இதனிடையே இப்பிரச்னை தொடர்பாக தியேட்டர் வட்டாரத்தில் விசாரித்தபோது, விநியோகஸ்தர்களுக்கு ஏற்பட்ட சிறு பிரச்னையால் படம் வௌியாகவில்லை. இதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. காலை காட்சி மட்டும் தான் ரத்து செய்யப்பட்டுள்ளது. 11மணிக்கு மேல் அனைத்து காட்சிகளும் தொடரும் என்று தெரிவித்துள்ளனர்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in