ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா, நடிகை மோனிகா ஆகியோர் சமீபத்தில் முஸ்லிம் மதத்திற்க மாறினர். இந்த நிலையில், சென்னை-28, அஞ்சாதே படங்களில் நடித்த டைரக்டர் அகத்தியனின் மகள் விஜயலட்சுமி, உதவி இயக்குனர் பெரோஸ் முகமதுவை காதலிப்பதாக தெரிவித்திருப்பதை அடுத்து, செப்டம்பர் மாதம் அவர்களது திருமணம் நடைபெற உள்ளது.
இதையடுத்து, விஜயலட்சுமி இந்து மதத்தில் இருந்து முஸ்லிம் மதத்துக்கு மாறி விடுவார் என்று செய்திகள் பரவிக்கொண்டிருக்கிறது. ஆனால் இந்த விசயம் விஜயலட்சுமிக்கு தெரியவந்தபோது, அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். நானும், பெராஸ் முகமதுவும் பள்ளி பருவத்தில் இருந்தே நண்பர்களாக பழகி வருகிறோம். எங்களிடம் நல்ல புரிதல் உள்ளது. அதுதான் தற்போது எங்களை வாழ்க்கையில் ஒன்று சேர்த்திருக்கிறது. நாங்கள் மதம் மாறி காதலித்தாலும் எங்களுக்குள் புரிதல் இருக்கிறது. நான் மதம் மாறமாட்டேன். நான் எப்போதும் நானாகவே இருப்பேன். அவர் அவராகவே இருப்பார். இந்த விசயத்தில் நாங்கள் ரொம்ப தெளிவாக இருக்கிறோம் என்று கூறியுள்ளார்.