பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
மலையாள சினிமாவின் மிக முக்கியமான குணச்சித்திர நடிகர்களில் ஒருவர் தான் கணேஷ்குமார்.. அதுமட்டுமல்ல.. இவர் ஒரு எம்.எல்.ஏவும் கூட... மூன்றுமுறை எம்.எல்.ஏவாக தொடர்ந்து வீரநடை போட்டுவரும் இவர், மாநில அரசில் அமைச்சர் பொறுப்பு வகித்தவரும் கூட. ஒரு ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால் இவர் நடிக்கும் படங்களில் எல்லாம் பெரும்பாலும் இவருக்கு போலீஸ் அதிகாரி வேடம் தரப்படுவதுதான்.
நாளை வெளியாகவுள்ள 'ஷி டாக்ஸி' படத்தில் கூட இவருக்கு போலீஸ் வேடம் தான். ஷாஜி சுரேந்திரன் என்பவர் இயக்கத்தில், காவ்யா மாதவன் கால் டாக்ஸி ட்ரைவராக நடித்துள்ள படம் தான் இந்த 'ஷி டாக்ஸி'.. இந்தப்படத்தில் தான் 'சிங்கம் சிவன்' என்கிற கேரக்டரில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் கணேஷ்குமார்.
கதைப்படி இவர் தமிழில் சூர்யா நடிப்பில் வெளியான 'சிங்கம்' படத்தை பார்த்து, அதேபோல தானும் துடிப்பான போலீஸ் ஆபிசராக இருக்க நினைப்பவர். அதற்கேற்ற மாதிரி சூர்யா 'சிங்கம்' படத்தில் வைத்திருந்தது போலவே மீசையும் வைத்துக்கொண்டு இந்தப்படத்தில் நடித்திருக்கிறாராம் கணேஷ்குமார். இவரின் இந்த புதிய அவதாரம் ரசிகர்களுக்கு புது அனுபவமாக இருக்கும் என்கிறார் இயக்குனர் ஷாஜி சுரேந்திரன்..