ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
கௌதம்மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் அச்சம் என்பது மடமையடா படம் முடியும் தருவாயில் உள்ளது. இந்நிலையில் சில இயக்குனர்கள் தங்களுடைய வெற்றிப்படத்தை பாகம் 2 என்ற பெயரில் எடுத்து வருகிறார்கள். அந்த வரிசையில் அஜீத் நடித்த என்னை அறிந்தால் படம் பார்ட் 2 எடுக்கும் எண்ணத்தில் இருக்கிறார் கௌதம் மேனன். இதை இரண்டு மொழிகளில் அதாவது இந்தி, தமிழில் எடுக்கவுள்ளார். தமிழில் அஜீத் நடிக்கிறார். இந்தியில் அங்குள்ள பிரபலமான நடிகர் அபிஷேக் பச்சனை வைத்து இயக்கும் எண்ணம் இருக்கிறதாம். ஒருவேலை இந்தியில் அஜீத் நடிக்க விரும்பினால் தலையை வைத்து இயக்குவேன் என்கிறார் கௌதம்மேனன். இந்த பிராஜெக்ட் பெரியது என்பதால் ஆர அமர யோசித்து எடுக்கப்போவதாகவும் இயக்குனர் கூறுகிறார். தல தரப்பு என்ன சொல்கிறது என்று சம்பந்தபட்டவர்களிடம் நூல் விட்டோம். பாகம் 2 படங்களில் நடிப்பதை தல பெரும்பாலும் விரும்புவதில்லை. அது இங்குள்ள சில நடிகர்களில் ஸ்டைல். அப்படிப்பட்டதை செய்யமாட்டார் பொதுவாக அடுத்தவர் பாணியை அஜீத் தொடமாட்டார். ஸ்கிரிப்ட் வித்தியாசமாக இருந்தால் யோசிக்க வாய்ப்பு உண்டு என்கிறார்கள் அஜீத் வட்டாரம்.