ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
அட்டகத்தி படத்தில் அறிமுகமான நந்திதா, தற்போது சுனுராமசாமி இயக்கும் 'இடம் பொருள் ஏவல்', ராதாமோகன் இயக்கும் 'உப்புக்கருவாடு' ஆகிய படங்கள் உட்பட நான்கைந்து படங்களில் நடித்து வருகிறார். உப்புக்கருவாடு படப்பிடிப்பில் இருந்தபோது நந்திதாவுக்கு விஜய்யின் 'புலி' படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. ஏற்கெனவே 'புலி' படத்தில் விஜய்யுடன் ஹன்சிகா மோத்வானி, ஸ்ருதி ஹாசன் இருவரும் நடிக்கின்றனர். பழம்பெரும் நடிகையான ஸ்ரீதேவி அம்மா வேடத்தில் நடிக்கிறார். இப்போது நந்திதாவும் புலி படத்தின் நட்சத்திரப் பட்டியலில் இடம் பெற்று விட்டார்!
இந்நிலையில், விஜய்யுடன் 'புலி'யில் நடிக்கும் மகிழ்ச்சியான அனுபவம் குறித்து ட்வீட் செய்துள்ளார் நந்திதா. அதோடு, இனிமேல் தன்னை பற்றி குறிப்பிடும்போது தனது முழுப் பெயரான நந்திதா ஸ்வேதா என்று குறிப்பிடும்படி, அனைவருக்கும் ஒரு வேண்டுகோளையும் வைத்துள்ளார்.