அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி |
நடிகர் சிம்பு, அஜித்தின் வெறித்தனமான ரசிகர் என்பது எல்லோருக்கும் தெரியும். அவரது படத்தை எங்கிருந்தாலும் முதல்நாள், முதல்ஷோவில் பார்த்துவிடுவார். அதேப்போல் அஜித்தின் ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் அவருக்கு வாழ்த்து சொல்ல தவறியதில்லை. தற்போது அவரது நடிப்பில் வாலு படம் வௌியாக இருக்கிறது. அறிமுக இயக்குநர் விஜய் சந்தர் இயக்கத்தில், சிம்பு, ஹன்சிகா மோத்வானி, சந்தானம், விடிவி கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படம் நீண்ட நாட்களாக கிடப்பில் கிடந்தது. தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட நிதி சிக்கலால் கிடப்பில் இருந்த இப்படம், வருகிற மே 9ம் தேதி ரிலீஸ் ஆக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
முன்னதாக வாலு படத்தின் ரிலீஸ் தேதி பலமுறை தள்ளி போனது, அதில் அஜித்தின் பிறந்த நாளான மே 1-ம் தேதியும் ஒன்று. அஜித் பிறந்தநாளில் படத்தை தான் ரிலீஸ் செய்ய முடியவில்லை டிரைலரையாவது ரிலீஸ் செய்வோம் என்று எண்ணியுள்ளார் சிம்பு. ஏற்னவே இப்படத்திற்கு ஒரு டிரைலர் வௌியாகியுள்ள நிலையில் இப்போது இரண்டாவது டிரைலரை, அஜித் பிறந்தநாளுக்காக ஸ்பெஷலாக ரிலீஸ் செய்ய இருக்கிறார் சிம்பு.