Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நடன திறமையை வெளிப்படுத்த சான்ஸ் கேட்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்!

29 ஏப், 2015 - 10:18 IST
எழுத்தின் அளவு:
Aishwarya-Rajesh-wants-powerful-roles

ரம்மி, பண்ணையாரும் பத்மினியும் படங்களில் நடித்த ஐஸ்வர்யா ராஜேஷ், அந்த படங்களில் கமர்சியல் நடிகை என்கிற அடையாளத்தை பெற்றநிலையில், காக்கா முட்டை படம் அவரை இன்னும் பலபடி உயர்த்தி விட்டுள்ளது. குறிப்பாக, இதுவரை அழகான நடிகை என்று யாருமே அவரை பாராட்டாத நிலையில் தற்போது காக்கா முட்டை படத்தைப் பார்த்து விட்டு பாரதிராஜா, பாலா போன்ற முன்னணி இயக்குனர்களே அழகான நடிகை என்று ஐஸ்வர்யா ராஜேஷை பாராட்டியிருக்கிறார்கள். அதனால் இதுவரை பத்தோடு பதினொன்றாக இருந்த ஐஸ்வர்யா தற்போது கவனிக்கப்படும் நடிகையாகியிருக்கிறார். அதோடு, வெயிட்டாக பர்பாமென்ஸ் கொடுக்கக்கூடிய நடிகை என்றும் சில டைரக்டர்கள் அவரை டிக் பண்ணி வைத்து அவருக்காக கதாபாத்திரங்கள் உருவாக்கி வருகின்றனர்.


இந்த நிலையில், இன்னும் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்த தான் தயாராக இருப்பதாக டைரக்டர்களிடம் கூறி வரும் ஐஸ்வர்யா ராஜேஷ், என்னிடம் நடிப்பு மட்டுமின்றி நடன திறமையும் உள்ளது. நான் சினிமாவில் நடிகையாவதற்கு முன்பு, கலைஞர் டிவியில் ஒளிபரப்பான மானாட மயிலாட நிகழ்ச்சியில் சீசன் 4-ல் நடனமாடி முதல் பரிசு பெற்றவள். அதனால் என்னை வித்தியாசமான நடன அசைவுகளிலும் பயன்படுத்துங்கள் என்று கேட்டுக்கொண்டு வருகிறார். அதோடு, சினிமா விருது நிகழ்ச்சிகளில் நடனமாடி தனது நடனத்திறமையையும் வெளிப்படுத்தவும் தொடங்கியிருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in