தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கொம்பன் படத்துக்கு எதிராக கிருஷ்ணசாமி கிளப்பிய சர்ச்சை கடைசியில் அந்தப் படத்துக்கு மிகப்பெரிய வசூலை அள்ளிக் கொடுத்துவிட்டது. கார்த்தி நடித்த எந்தப்படமும் எட்டாத அளவுக்கு வசூல் சாதனையை செய்துவிட்டதாம் கொம்பன் படம். சகுனி, பிரியாணி, அழகுராஜா என தொடர்ந்து தோல்விப்படங்களில் நடித்ததால்... ஏறக்குறைய கார்த்தியின் எதிர்காலமே கேள்விக்குறியாக இருந்தது. அதனால் அவரும் கடும் விரக்தியில் இருந்தார்.
இந்த நேரத்தில்தான் மெட்ராஸ் படத்தில் நடித்தார். அந்தப் படம் கார்த்திக்கு மிகப்பெரிய பெயரை வாங்கிக் கொடுத்தாலும் வர்த்தக அளவில் ஓரளவுக்குத்தான் வெற்றியடைந்தது. மூன்று தோல்விப்படங்களுக்கு பிறகு ஒரு வெற்றிப்படத்தில் நடித்தாலும் பருத்திவீரன் படம் போல் மிகப்பெரிய ஹிட் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் கொம்பன் படத்தில் நடித்தார். கார்த்தி எதிர்பார்த்தது போலவே கொம்பன் படம் கமர்ஷியலாக மிகப்பெரிய வெற்றியடைந்திருக்கிறது.
தற்போது கிடைத்த தகவலின்படி, தமிழகத்தில் மட்டும் சுமார் 20 கோடி வசூல் செய்திருக்கிறது கொம்பன். எப்எம்எஸ், சாட்டிலைட் பிற மாநில வசூல் எல்லாம் சேர்த்தால் மேலும் 10 கோடி! இதை எல்லாம் கவனத்தில் வைத்து அடுத்தப் படத்திற்கு தன்னுடைய சம்பளமாக 10 கோடியை நிர்ணயித்திருக்கிறாராம்.