ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கமல்ஹாசன் நடித்துள்ள 'உத்தம வில்லன்' படம் தமிழ் மற்றும் தெலுங்கில் மே 1ம் தேதி வெளியாக உள்ளது. கமல்ஹாசன் நடித்துள்ள பல படங்கள் தெலுங்கில் தொடர்ந்து டப்பிங் செய்யப்பட்டு வருகின்றன. அவருடைய படங்கள் தெலுங்கில் டப்பிங் செய்யப்படும் போது பிரபல பின்னணிப் பாடகர்களான எஸ்.பி.பாலசுப்ரமணியம், மனோ ஆகியோர்தான் பின்னணிக் குரல் கொடுப்பார்கள். தெலுங்கு நன்றாக பேசத் தெரிந்திருந்தாலும் சொந்தக் குரலில் தெலுங்கு டப்பிங் பேசுவதை கமல் தவிர்த்து வந்தார்.
ஆனால், 'உத்தம வில்லன்' படத்திற்காக தன்னுடைய சொந்தக் குரலிலேயே டப்பிங் பேசியிருக்கிறார். முதல் முறை டப்பிங் செய்து பார்த்த பின் முழு திருப்தி இல்லாததால் இரண்டாவது முறையாக டப்பிங் செய்திருக்கிறார் கமல்ஹாசன். இந்தப் படத்திற்காக சமீபத்தில் ஐதராபாத்தில் நடந்த பிரமோஷன் நிகழ்ச்சிகளில் எல்லாம் கலந்து கொண்டு படத்தைப் பற்றி நன்றாகவே விளம்பரப்படுத்தியுள்ளார் கமல்ஹாசன். பெரும்பாலான தொலைக்காட்சிகளுக்குப் பேட்டியும் கொடுத்திருக்கிறார். ஆனால், தமிழில் மட்டும் அவர் சில குறிப்பிட்ட தொலைக்காட்சிகளுக்கு மட்டுமே பேட்டி கொடுத்திருக்கிறார்.
தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் 'உத்தம வில்லன்' உலகம் முழுவதும் சுமார் 1500 திரையரங்குகளில் வெளியாக உள்ளது.