தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கால் டாக்சியை மையப்படுத்தி மலையாளத்தில் ஷாஜி என்பவர் இயக்கியுள்ள 'ஷி டாக்ஸி' என்கிற படத்தில் கால் டாக்ஸி ட்ரைவராக நடித்திருக்கிறார் காவ்யா மாதவன். கதைப்படி டாக்ஸி ட்ரைவரான அவரது தந்தை இறந்துவிடவே, குடும்ப சூழ்நிலை காரணமாக கால் டாக்ஸி ஓட்டி சம்பாதிக்கும் நிலைக்கு தள்ளப்படுகிறார் காவ்யா மாதவன். கல்லூரி செல்லும் மூன்று மாணவிகளை தினசரி காரில் ஏற்றிக்கொண்டு சென்று வருவதும் அவரது வேலையில் ஒரு முக்கிய அம்சம்..
இதுபோக மீதி நேரங்களில் கிடைக்கும் சவாரிக்கு போகும் காவ்யா மாதவன் காரில் சவாரி என்கிற பெயரில் ஏறும் சில அடாவடி பேர்வழிகள், அவரிடம் ஏதாவது வாலாட்ட நினைத்தால் அதற்கும் ஒரு வழி வைத்திருக்கிறாராம். அதாவது அவரது தந்தை டாக்ஸி ஒட்டிய காலத்தில் கேரளாவுக்கு வரும் ஜனாதிபதி அவரது காரில் சுற்றிப்பார்க்கப்போவது வழக்கமாம்.
அப்போது அவரது தந்தை, ஜனாதிபதியுடன் எடுத்த போட்டோவை எப்போதும் காரில் அவைத்திருகும் காவ்யா மாதவன் அதைக்காட்டி, தனக்கு போலீஸ் உயர் அதிகாரி வரை தெரியும் என உதார்விட்டே வம்பிழுப்பவர்களை வழிக்கு கொண்டுவந்து விடுகிறாராம். இந்தவிதமாக காவ்யாவின் பின்னணியை சுவாரஸ்யமாக பின்னியிருக்கிறாராம் இயக்குனர் ஷாஜி சுரேந்திரன்.