தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சிவகார்த்திகேயன் நடிப்பில் இங்கே ரஜினி முருகன் என்ற பெயரில் ஒரு படம் உருவாகிக் கொண்டிருக்க, மலையாளத்திலோ புலி முருகன் என்ற பெயரில் ஒரு படம் தயாராகிறது. இப்படத்தில் மோகன்லால் ஹீரோவாக நடிக்கிறார். அவருடன் நடிகர் பிரபு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். பிரபு - மோகன்லால் இருவரும் ஏற்கனவே காலாபாணி என்ற படத்தில் இணைந்து நடித்துள்ளனர். பிரபு - மோகன்லால் இவர்களுடன் 60 தென்னிந்திய நடிகர்கள் - நடிகைகள் இப்படத்தில் நடிக்க உள்ளனர்.
'போக்கிரி ராஜா', 'கசின்ஸ்' உட்பட பல வெற்றி படங்களை இயக்கிய வைசாக் இந்தப் படத்தை இயக்குகிறார். புலிமுருகன் படத்தில் இதுவரை ஏற்று நடித்திராத வித்தியாசமான் ஒரு ஆக்ஷன் கேரக்டரில் நடிக்க உள்ளார் மோகன்லால். மலையாள சினிமாவை பொருத்தவரையில் அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் மம்முட்டி நடித்த 'பழசிராஜா' படம்தான். அப்படத்தின் தயாரிப்பு செலவு 25 கோடி ரூபாய்! புலிமுருகன் படம் ஆக்ஷன் படம் என்பதால் பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் பீட்டர்ஹெய்னை இப்படத்தின் சண்டைப்பயிற்சியாளராக கமிட் உள்ளனர். இப்படத்தின் பெரும்பகுதி காட்சிகளை வியட்நாமில் படமாக்க உள்ளனர்.