தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
நடன இயக்குனர் கலா மாஸ்டர் மானாட மயிலாட நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு இல்யூஷன் அரங்கம் அமைத்து நடன நிகழ்ச்சி நடத்தினார் உலகிலேயே பெரிய மேடையில் நடந்த இல்யூஷன் ஷெட் நடனம் என்கிற வகையில் அந்த நிகழ்ச்சி கின்னஸ் சாதனை படைத்தது.
இதுபற்றி கலா மாஸ்டர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது: மானாட மயிலாட நிகழ்ச்சியின் 10வது பாகம் வெற்றிகரமாக நடந்து கொண்டிருக்கிறது. இதன் சாதனை முயற்சியாக 4 ஆயிரம் சதுர அடியில் இல்யூஷன் செட்( இல்லாததை இருப்பது போன்று காட்டும் யுக்தியில் அமைப்பது) போட்டு நிகழ்ச்சி நடத்தினோம். இதுதான் உலகிலேயே பெரிய இல்யூஷன் செட் என கின்னஸ் சாதனை அமைப்பு வந்து பார்த்து சான்றிதழ் வழங்கியுள்ளது. இது மானாட மயிலாட டீமிற்கு கிடைத்த வெற்றி. எங்கள் நிகழ்ச்சிக்கு அமைந்த மைல் கல்.