அயோத்தியில் இடம் வாங்கிய அமிதாப்பச்சன் | இயக்குனர் 'பசி' துரை மறைவு | சினிமாவில் வளர திறமை மட்டுமே போதாது : பரிணிதி சோப்ரா | 25 நாட்களில் 150 கோடி வசூலித்த ஆடுஜீவிதம் | பிரபல இயக்குனரின் வீட்டில் திருடப்பட்ட நகைகள் ஒரேநாளில் மீட்பு | ரஜினி 171 தலைப்பு 'கூலி' - 'ரெட்ரோ' லுக்கில் அசத்தும் ரஜினிகாந்த் | 3வது திருமணநாளை கொண்டாடிய விஷ்ணு விஷால் | கீர்த்தி சுரேஷிற்கு திருமணமா? | வருத்தத்தில் ஜாக்குலின் | சீதா ராமன் தொடரில் என்ட்ரி கொடுத்த தீபா : இனி கதையே மாறப்போகுதாம் |
அருந்ததி படத்திற்கு பிறகு எல்லா நடிகைகளுக்குமே ஒரு படத்திலாவது பேயாக நடித்துவிட வேண்டும் என்கிற ஆசை வந்துவிட்டது. அரண்மனை படத்தில் ஹன்சிகா நடித்தார். டார்லிங் படத்தில் நிக்கி கல்ராணி நடித்தார், 1பந்து 4ரன் 1 விக்கெட் படத்தில் ஹாசிகாதத் நடித்தார், சவுகார்பேட்டை படத்தில் ராய் லட்சுமி நடிக்கிறார் இந்த வரிசையில் தற்போது சுப்பிரமணியபுரம் சுவாதியும் சேருகிறார்.
திரிபுரசுந்தரி என்ற பேன்டஸி படத்தில் பேயாகவோ, ஆத்மாவாகவோ, மறுஜென்ம பெண்ணாகவோ நடிக்கிறார் சுவாதி. அவருக்கு ஜோடியாக நவீன் சந்த்ரா நடிக்கிறார். இவர்களுடன் ராதாரவி, தலைவாசல் விஜய், சண்முகராஜன் ஆகியோர் நடிக்கிறார்கள். ரவிகுமார் சானா ஒளிப்பதிவு செய்கிறார், கமரன் இசை அமைக்கிறார். சரவண சுப்பையா வசனம் எழுதுகிறார், ராஜா கிரண் என்ற புதுமுகம் இயக்குகிறார்.