ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தன் மகள் சினிமாவில் நடிக்கப் போவதாக வெளியான தகவல்களை, முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் மறுத்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சச்சினின் மகள் சாரா, 17. இவர், இந்தி திரைப்படம் ஒன்றில், ஷாகித் கபூர் ஜோடியாக நடிக்கப் போவதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், இந்த தகவலை சச்சின் மறுத்துள்ளார்.
இது தொடர்பாக, அவர் கூறியதாவது: என் மகள் சாரா, இப்போது படித்து வருகிறார். அவர், படங்களில் நடிக்கப் போவதாக அடிப்படை ஆதாரமற்ற தகவல்களை வெளியிட்டுள்ளனர்; இது, முட்டாள்தனமான தகவல். தயவு செய்து, அவரை படிக்க விடுங்கள். தேவையற்ற செய்திகளை வெளியிடுவதை தவிருங்கள். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.