தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கமல்ஹாசன் நடித்துள்ள 'உத்தம வில்லன்' படம் மே 1ம் தேதி வெளியாக உள்ளது. இதற்கடுத்து இவர் நடித்துள்ள 'பாபநாசம்' படம் அநேகமாக ஜுலை மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 'விஸ்வரூபம்' படத்தின் முதல் பாகம் எடுத்த போதே, அதன் இரண்டாவது பாகத்தையும் கமல் படமாக்கியிருந்தார். அதன் சில காட்சிகளைப் படமாக்கினால்தான் இரண்டாவது பாகம் வெளிவரும். ஆனால், படத்தின் தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரனுக்கும், கமல்ஹாசனுக்கும் இடையே உள்ள பிரச்சனையால் அந்த சில காட்சிகளின் படப்பிடிப்பு எப்போது நடைபெறும் என்று தெரியாது. இப்போதைக்கோ, இந்த ஆண்டோ, அல்லது இனிமேலோ 'விஸ்வரூபம் 2' படம் வெளிவருவது அதன் தயாரிப்பாளர் கையில்தான் உள்ளது.