மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
காஞ்சனா-2 படத்துக்கு முன்புவரை அடங்கிக்கிடந்த டாப்சியின் மார்க்கெட் இப்போது சூடுபிடித்திருக்கிறது. அதிரடி பேயாக அவர் நடித்திருந்தாலும் அவரை அழகிய பேய் என்று கோடம்பாக்கம் கொண்டாடி வருகிறது. அதோடு, சிலர் பேய் வேடங்களில் நடிக்கவும் அவரை புக் பண்ணி வருகின்றனர். இதனால் ஹாரர் படங்களை மொத்த குத்தகை எடுத்துவிடும் நிலையில் சென்று கொண்டிருக்கிறார் டாப்சி.
இந்த நிலையில், அரண்மனையைத் தொடர்ந்து ஸ்ரீகாந்த் நடிக்கும் சவுகார் பேட்டை படத்தில் மாயா என்றொரு பேய் வேடத்தில் நடித்து வருகிறார் ராய் லட்சுமி. இதுவரை தமிழ்ப்படங்களில் வெளியான பேய் வேடங்களை விட இந்த படத்தில் அதிரடியான பேயாக நடிக்கிறாராம் ராய்லட்சுமி.
அதோடு இனிமேல் கவர்ச்சி ரூட்டை மாற்றி இதுபோன்று அதிரடியான பர்பார்மென்ஸ் ரோல்களில் கவனத்தை திருப்ப திட்டமிட்டுள்ள ராய்லட்சுமி, யாராவது இயக்குனர்கள் பேய் படம் எடுக்கிறார்கள் என்பதை கேள்விப்பட்டால், சவுகார்பேட்டையில் தான் பேயாக நடித்துள்ள போட்டோக்களை அனுப்பி வைத்து, பேய் வேடத்தில் நடிக்க எனக்கே சான்ஸ் தர வேண்டும் என்று உரிமைக்குரல் எழுப்பி வருகிறார். ஆக, பேய் வேடங்களை கைப்பற்ற மேற்படி நடிகைகளுக்கிடையே திரைக்குப் பின்னால் தள்ளுமுள்ளு நடந்து கொண்டிருக்கிறது.