ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ப்ரியாஆனந்த் பல படங்களில் நடித்திருந்தபோதும், இன்னமும் அவரை நம்பி வெயிட்டான வேடங்களை எந்த டைரக்டர்களும் கொடுக்க முன்வரவில்லை. கவர்ச்சி உடைதரித்து வந்து மரத்தை சுற்றி டூயட் பாட மட்டுமே யூஸ் பண்ணி வருகின்றனர். அதையேதான், வை ராஜா வை படத்திலும் செய்திருக்கிறார் இயக்குனர் ஐஸ்வர்யா ஆர்.தனுஷ். ப்ரியாஆனந்தை கெளதம் கார்த்திக்குடன் வழக்கம்போல் டூயட் பாட வைத்து விட்டு டாப்சியை ஒரு வெயிட்டான பர்பார்மென்ஸ் வேடத்தில் நடிக்க வைத்திருக்கிறாராம். அதன்காரணமாகவே அப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் நடந்தபோது அனைவருமே டாப்சி புகழ் பாடினர். இதனால் அதே மேடையில் அமர்ந்திருந்த ப்ரியாஆனந்த், செம பீலில் இருந்தார். அதையடுத்து, அவர் பேசும்போதும், என்னைவிட டாப்சிக்குத்தான் இந்த படத்தில் நல்ல ரோல். அதை சிறப்பாகவும் அவர் ஸ்கோர் பண்ணியிருக்கிறார் என்று தன்பங்குக்கு இன்னொரு நாயகியை வேறு வழியில்லாமல் புகழ்ந்து விட்டு போய் அமர்ந்தார். அதோடு, விழா முடியும் வரை ஏதோ பீலிங்சிலேயே அமர்ந்திருந்தார் ப்ரியாஆனந்த்.