மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் |
பிரபல பின்னணி பாடகர் ஸ்ரீனிவாஸ் கங்காரு படத்தின் மூலம் இசை அமைப்பாளராக அறிமுகமானார். படத்தின் பாடல்களுக்கு கிடைத்திருக்கும் வரவேற்பை தொடர்ந்து இனி தொடர்ந்து படங்களுக்கு இசை அமைக்க முடிவு செய்திருக்கிறார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: நான் இதுவரை 2 ஆயிரம் பாடல்கள் பாடியிருக்கிறேன். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தியில் அதிகமாக பாடியிருக்கிறேன். இசை மீது தணியாத ஆசை இருந்தது. ஆனால் இசை அமைப்பாளர் வாய்ப்புத் தேடவில்லை. பாடுவதற்கே நேரம் சரியாக இருந்ததால் அதைப்பற்றி சிந்திக்கவில்லை. ஏய் நீ ரொம்ப நல்லா இருக்கே படத்தில் இயக்குனர் வஸந்த் சார் ஒரு பாடலுக்கு இசை அமைக்கும் வாய்ப்பு கொடுத்தார். "இனி நானும் நானில்லை..." பாடல் ஹிட்டானது. அதன் பிறகும் இசை அமைக்கும் ஆர்வம் இல்லை.