ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
காதல் கோட்டை, கோகுலத்தில் சீதை போன்ற படங்களை இயக்கிய அகத்தியனின் மகள் விஜயலட்சுமி, சென்னை 28 படம் மூலம் நடிகையாக அறிமுகமானார். அஞ்சாதே, ஆடாம ஜெயிச்சோமடா, வெண்ணிலா வீடு உள்பட பல படங்களில் நடித்தார். விஜயலட்சுமி கடந்த 4 ஆண்டுகளாக ஒருவரை தீவிரமாக காதலித்து வந்தார். தான் காதலிப்பதை ஒப்புக்கொண்டிருந்த விஜயலட்சுமி காதலன் யார் என்பதை ரகசியமாக வைத்திருந்தார். தற்போது தன் காதலையும், காதலனையும், கல்யாணத்தையும் வெளிப்படையாக கூறிவிட்டார்.
வல்லினம் படத்தில் இயக்குனர் அறிவழகனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய பெரோஸ் என்பவரே அவரது காதலர். தற்போது காதலுக்கும், கல்யாணத்துக்கும் இரு வீட்டாரும் பச்சைக்கொடி காட்டிவிட்டதால் வெளிப்படையாக அறிவித்துவிட்டார் விஜயலட்சுமி. பெரோஸ் அடுத்து படம் இயக்க இருக்கிறார். அதை தயாரிக்க இருப்பவர் விஜயலட்சுமிதான். இதற்காக டீம் டைம் டாக்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியிருக்கிறார்.
"நான் நடித்திருக்கும் ரெண்டாவது படமே எனது கடைசி படம். விரைவில் ரிலீசாக இருக்கிறது. வெண்ணிலா வீடு படத்திற்கு பிறகு புதிய படங்கள் எதுவும் ஒப்புக்கொள்ளவில்லை இனி படங்களில் நடிக்க மாட்டேன். பெரோஸ் அடுத்து படம் இயக்குகிறார். காதலை இருவர் வீட்டிலும் ஒப்புக் கொண்டார்கள். வருகிற டிசம்பருக்குள் திருமணம் நடக்கும்" என்கிறார் விஜயலட்சுமி.